Home » வீடுகளுக்கே சென்று மதுபான விற்பனை செய்ய அனுமதி..!
இந்தியா

வீடுகளுக்கே சென்று மதுபான விற்பனை செய்ய அனுமதி..!

liquior-dailystand.in

கொரோனா அச்சத்தால் மக்கள் வெளியே கூட்டமாக செல்லவும் , ஒன்று கூடவும் தடை விதிக்கபட்டுள்ளது. மதுபிரியர்கள் சமாளிக்க வீடுகளுக்கே சென்று மது விற்பனை செய்ய பல மாநிலங்கள் முடிவெடுத்து உள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 வரை மட்டுமே மதுபானம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கபடும் எனவும் செல்போன் எண் மற்றும் வாட்ஸ் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் கட்டுபாட்டு பகுதிகளில் மதுபான டெலிவரிக்கு தடை விதிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Reply