September 25, 2020
Home » மும்பையில் வெளுத்து வாங்கும் மழை…!! 10 மணி நேரத்தில் 254 மிமீ மழை பதிவு…!!
இந்தியா

மும்பையில் வெளுத்து வாங்கும் மழை…!! 10 மணி நேரத்தில் 254 மிமீ மழை பதிவு…!!

mumbai-dailystand

மும்பையில் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 12 மணிக்கு மேல் கடலில் உயர் அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 254 மிமீ மழை பெய்துள்ளது.

ஆனால் தொடர்ந்து விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் முக்கியச் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தெங்கியுள்ளது. மேலும் பேருந்துகள், கடைகள் நீரில் மூழ்கியுள்ளன. ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில்கள் எதுவும் தேங்கி நிற்கவில்லை.

mumbai-dailystand

மேலும் பிரிஹன் மும்பை கார்ப்பரேஷன் செய்திகளின் படி, ஆகஸ்ட் 3ம் தேதி காலை 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை மும்பையில் 140.5 மிமீ மழையும் மேற்கு மற்றும் கிழக்கு புறநகர்ப்பகுதிகளில் 84.77 மிமீ மற்றும் 79.27 மிமீ மழையும்  பதிவாகியுள்ளது.

Leave a Reply