September 22, 2020
Home » பல கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..! இவாங்கா டிரம்ப் பாராட்டு..!
இந்தியா

பல கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..! இவாங்கா டிரம்ப் பாராட்டு..!

girl-dailystand.in

கொரோனாவால்  நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்வது, லாரிகளில் செல்வது என கிடைத்த வாகனங்களில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் ஹரியானாவில் இருந்து பீகார் வரை காயமடைந்த தந்தையை சைக்களில் அமர வைத்து 1200 கிமீ அழைத்து சென்றுள்ளார் 15 வயது சிறுமி .தினசரி 100 கிமீ பயணித்து அவர்கள் சொந்த ஊரை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அந்த சிறுமியை டெல்லிக்கு அழைத்து பயிற்சி கொடுக்க போவதாகவும் தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஒங்கர் சிங் கூறியுள்ளார்.

மேலும் அந்த சிறுமியை இவங்கா டிரம்ப் பாராட்டி டிவிட்டரில் கூறியுள்ளார்.

Related posts

Leave a Reply