September 25, 2020
Home » “பல்கலைகழக தேர்வுகளை ரத்து செய்ய முடிவு ..! அறிவிப்பினை வெளியிட்ட மாநிலம்” – துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா அறிவிப்பு..!
இந்தியா

“பல்கலைகழக தேர்வுகளை ரத்து செய்ய முடிவு ..! அறிவிப்பினை வெளியிட்ட மாநிலம்” – துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா அறிவிப்பு..!

exam-dailystand

நாடு முழுவதும் கொரோனா தொற்று படுவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றினால் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மத்திய , மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளை கடந்த மார்ச் மாதம் முதல் மூட உத்தரவிட்டன.

இன்றளவும் கல்லூரிகள் , பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளன. பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகள் மூடபட்டுள்ளதால் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் நிலவி வருகிறது. ஒரு சில மாநிலங்கள் தேர்வுகளை ரத்து செய்து முடிவெடுத்துள்ளன.

இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் உள்ள பல்கலைகழக தேர்வுகள் ரத்து செய்ய யூனியன் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பல்கலைகழக இறுதி தேர்வுகளும் ரத்து செய்யபடுவதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Reply