Home » புதுச்சேரியில் 700ஐ கடந்த கொரோனா பாதிப்பு..!
இந்தியா

புதுச்சேரியில் 700ஐ கடந்த கொரோனா பாதிப்பு..!

corona_update_dailystand.in

நாடு முழுவதும் கொரோனா தொற்று ஆரம்ப கட்டத்தில் மெல்ல பரவ தொடங்கியது. அதன் பின் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியது தற்போது புது வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது.

அதைப்போல தான் புதுச்சேரியில் ஆரம்பத்தில் கொரோனா தொற்று மெல்ல தொடங்கியது . பின் தற்போது புது உச்சத்தில் பாதிப்புகள் உறுதி செய்யபட்டு வருகின்றன. புதுச்சேரியில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 714 ஆக உள்ளது.

இதுவரை 12 பேர் கொரோனா பாதிக்கபட்டு உயிரிழந்து உள்ளனர். மேலும் 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக புதுச்சேரி சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Reply