Home » 30 நொடிகளில் கொரோனாவை கண்டுபிடிக்கும் 4 தொழில்நுட்பங்கள் டெல்லியில் பரிசோதனை – பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர்…!!
இந்தியா

30 நொடிகளில் கொரோனாவை கண்டுபிடிக்கும் 4 தொழில்நுட்பங்கள் டெல்லியில் பரிசோதனை – பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர்…!!

corona-dailystand.in

இஸ்ரேல் விஞ்ஞானிகள், 30 வினாடிகளில் கொரோனாவை கண்டுபிடிக்கும் வகையில் 4 தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளனர். டெராஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்காப்பி (terahertz spectroscopy) தொழில்நுட்பம், ஐசோதெர்மல் டெஸ்ட் (isothermal test), பாலி அமினோ ஆசிட்ஸ் முறை (poly amino acids) , பேச்சு அடிப்படையிலான பரிசோதனை ஆகிய 4 தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பங்களை டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படவுள்ளது என பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, இது வழக்கமான பரிசோதனை போல் இல்லாமல், ப்ரீதலைசர் (breathalyser) போன்ற கருவி முன் ஊதினாலோ அல்லது பேசினாலோ மாதிரியை சேகரித்து பரிசோதிக்கும் வகையிலான தொழில்நுட்பம் என
கூறியுள்ளனர்.

Related posts

Leave a Reply