September 28, 2020
Home » தரைப்பாலத்தில் செல்லும் போது வெள்ளத்தில் இரண்டு பேருடன் அடித்து செல்லபட்ட கார்- வீடியோ
இந்தியா

தரைப்பாலத்தில் செல்லும் போது வெள்ளத்தில் இரண்டு பேருடன் அடித்து செல்லபட்ட கார்- வீடியோ

andhra-dailysatnd

ஆந்திர மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

தரைபாலங்களில் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஒடுவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. ஆனால் சிலரோ அதன் அபாயத்தை உணராமல் கடந்து செல்கின்றனர்.  இந்நிலையில் அனந்தபூரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டுள்ளது.

அந்த காரில் 2 பேர் பயணம் செய்துள்ளனர். பாதி தூரம் வரை கடந்த கார் அதன் பின் நிலைகுலைந்து வெள்ளத்தில் அடித்து செல்லபட்டது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Reply