Home » 5 சிறுமிகளை பலாத்காரம் செய்த கொடூரன்…!! வீடுமுழுவதும் தோண்ட தோண்ட கிடைத்த ஆபாச வீடியோக்கள்…தலை சுற்றிபோன காவல்துறையினர்…!!
இந்தியா

5 சிறுமிகளை பலாத்காரம் செய்த கொடூரன்…!! வீடுமுழுவதும் தோண்ட தோண்ட கிடைத்த ஆபாச வீடியோக்கள்…தலை சுற்றிபோன காவல்துறையினர்…!!

sex-dailystand

போபாலை பூர்வவீகமாக கொண்ட பியாரே மியான் ஒரு செய்தித்தாள் உரிமையாளர் ஆவார். இவருக்கு வயது 68. இதுவரை இவர்மீது ஐந்து சிறுமிகள் மற்றும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளனர். ஆனால் அப்போது பியாரே தப்பியோடினார். இதனை அடுத்து போலீசார் அவர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் பலவிதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 2நாட்களில் போபால் மற்றும் இந்தூரில் உள்ளா மியானின் ஐந்து வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆபாச சி.டி.க்கள், டிவிடிகள், பென் டிரைவ்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் சிறுவர் ஆபாச படங்களும் இருந்தன என போபால் சாய் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணா தோட்டா பி.டி.ஐ தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் விலையுயர்ந்த மதுபானங்களையும் காட்டு விலங்குகளின் எலும்புகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுவரை நான்கு சிறு சிறுமிகள் மற்றும் ஒரு பெண்ணும் மியான் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளனர் என்றும் கடந்த செவ்வாய் கிழமை கோ-இ-பிசா காவல் நிலையத்தில் சிறுமியால் பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவின் (எஸ்ஐடி) தலைவரான தோட்டா செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மியான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மைனர் சிறுமிகளில் 2 பேர் எஸ்சி / எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் பிரிவுகளும் செயல் படுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து காட்டு விலங்குகளின் தோல்கள் மற்றும் எலும்புகள் கைப்பற்றப்பட்டதால் அவருக்கு கலால் சட்டம் மற்றும் வனவிலங்கு சட்டம் ஆகியவை சேர்க்கப்பட்டன.

Related posts

Leave a Reply