Home » யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் ‘காக்டெய்ல்’…!! இந்த கலக்கலான படம் எப்போ ரிலீஸ் தெரியுமா…??
சினிமா

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் ‘காக்டெய்ல்’…!! இந்த கலக்கலான படம் எப்போ ரிலீஸ் தெரியுமா…??

cocktail-dailystand

பிரபல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவருடமும் இணைந்து நடித்த காமடி நடிகர் யோகிபாபு
தற்பொழுது ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவ்வகையில் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒன்று ‘காக்டெய்ல்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான முருகன் இயக்கி பிரபல ஒளிப்பதிவாளரான பி. ஜி. முத்தையா தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, சாமிநாதன், ரமேஷ், மிதுன் என பலர் நடித்துள்ளனர். அது மட்டுமின்றி காக்டெய்ல் என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

cocktail-dailystand

இந்தப் படம் கடந்த மார்ச் 20 -ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்பதால் ரிலீஸ்க்கு தயாராக இருந்த படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி வருகிறது. சமீபத்தில் பொன்மகள் வந்தாள் மற்றும் பெங்குயின் ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி காயத்ரி ரகுராம் அவர்களின் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படமும் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’ என்ற படமும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது யோகிபாபுவின் காக்டெய்ல் படத்தையும் ஓடிடியில் வரும் ஜூலை 10 -ம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

Leave a Reply