Home » சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்த சுஷாந்த்தின் காதலி..!
சினிமா

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்த சுஷாந்த்தின் காதலி..!

sushanth_girlfriend_dailystand.in

கடந்த மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி அலையையே கிளப்பியது. அவரது மரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது காதலியான நடிகை ரியா சக்ரபோர்ட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில், ”நான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கேர்ள் ஃபிரெண்ட். அவர் மறைந்து ஒரு மாதம் ஆகிறது. எனக்கு அரசின் மேல் நம்பிக்கை உள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எந்த மனஅழுத்தம் அவரை மரணம் வரை கொண்டு சென்றது என எனக்கு தெரிய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

sushant_girlfrnd_dailystand.in

Leave a Reply