Home » சூப்பர் ஸ்டாரின் அதிரடி அறிவிப்பு… அப்போ “அண்ணாத்த” படத்தின் நிலைமை..?
சினிமா

சூப்பர் ஸ்டாரின் அதிரடி அறிவிப்பு… அப்போ “அண்ணாத்த” படத்தின் நிலைமை..?

annathe_dailystand.in

‘தர்பார்’ படத்திற்குப் பின், சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்தார் நடிகர் ரஜினி. அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

அக்டோபரில் வெளியாவதாக இருந்த படத்தின் ரிலீஸ், கொரோனா அச்சுறுத்தலால் 2021 பொங்கலுக்கு வெளியீடு என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

சுமார் 45% படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், அண்ணாத்த பொங்கல் ரிலீசுக்கு வாய்ப்பில்லை. ஏனெனில், கொரோனா பரவல் முழுமையாக ஓயாமல் படப்பிடிப்புக்கு வர போவதில்லை என ரஜினி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சிகிச்சைக்கு பிறகு, தற்போது, பழைய நிலைக்கு உடல்நிலை திரும்பிவருவதால்,இந்த அசாதாரண சூழ்நிலையில், படப்பிடிப்பின் மூலம் தனக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது எனவும், படப்பிடிப்பின்போது யாருக்காவது கொரோனா வந்துவிட்டால் பெரிய சர்ச்சையாகிவிடும் என்பதால் இந்த முடிவை ரஜினி எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

இதனால் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிந்தபின், படப்பிடிப்பு தொடங்கி, அனைத்துப் பணிகளும் முடியத் தாமதமாகும் என்பதால் பொங்கல் வெளியீடுக்கு வாய்ப்பில்லை என்கின்றனர் படக்குழுவினர்.

மேலும், ‘அண்ணாத்த’ படத்தில் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டதால், இனி வரும் காட்சிகள் அனைத்தையும் சென்னையிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Related posts

Leave a Reply