September 28, 2020
Home » ‘சூரரைப் போற்று’ திரைப்படம் OTT தளத்தில் அக்டோபர் 30ம் தேதி ரிலீஸ்.. – நடிகர் சூர்யா ட்வீட்..!
சினிமா

‘சூரரைப் போற்று’ திரைப்படம் OTT தளத்தில் அக்டோபர் 30ம் தேதி ரிலீஸ்.. – நடிகர் சூர்யா ட்வீட்..!

soorarai-potru-release-dailystand.in

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகன் ஆவார். தனது கடின உழைப்பு மற்றும் திறமையால், ரசிகர்களை தன் வாசம் கட்டி இழுத்தவர் இவர்.

இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகிய படம் சூரரை போற்று. இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். மேலும், இப்படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் மற்றும் ஷிக்யா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. மேலும், OTTயில் ரிலீஸ் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

இப்படத்தின், பர்ஸ்ட் சிங்கிள் ஆக மாறா தீம் வெளியிடபட்டது. அதனைத் தொடர்ந்து, வெய்யோன் சில்லி பாடல் நடு வானில் பிப்ரவரி மாதம் 13ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்காக, 70 பள்ளி குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, ‘காட்டு பயலே’ பாடலின் 1 நிமிட வீடியோ, நடிகர் சூர்யா பிறந்தநாளன்று, அதாவது, 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானது தொடங்கி நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.

கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என தெரியாத சூழல் நிலவி வருவதால், விநாயகர் சதுர்த்தி தினமான இன்று, இப்படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அதாவது, சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை, OTT தளமான அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30ம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் OTT தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Reply