Home » சென்னையில் சாதாரணமாக வாழவே மாதம் 25 ஆயிரம் தேவை…. ஆர்.கே.செல்வமணி அதிரடி பேட்டி….!
சினிமா

சென்னையில் சாதாரணமாக வாழவே மாதம் 25 ஆயிரம் தேவை…. ஆர்.கே.செல்வமணி அதிரடி பேட்டி….!

selvamani-dailystand.in

ஊரடங்கு காரணமாக சினிமாத்துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெப்சி அமைப்பில் 25,000 பேர் பதிவிட்ட செய்யப்பட்ட தொழிலாளிகள், பதிவு செய்யாமல் 15,000 ஆயிரம் பேர் உள்ளனர்.படப்பிடிப்புக்குள் இல்லாததால் சினிமா துறை கடுமையாக பாதித்துள்ளது. மற்ற தொழில் துறைகளுக்கு கிடைக்கும் உதவி திரைத்துறைக்கு கிடைப்பதில்லை. எனவே சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதித்த அரசிற்கு நன்றி என ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். இந்த அமைப்பில் இருக்கும் 50,000 பேரில், 50 பேர் மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றும் இவர் கூறியுள்ளார்.

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 20 பேரை வைத்து நடத்துவது கடினம் என்பதால், 40 பேரை வைத்து படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் கஷ்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவு வேண்டும் என்றும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

Related posts

Leave a Reply