September 28, 2020
Home » போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்பதேற்கே போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்..!
சினிமா

போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்பதேற்கே போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்..!

rajini-angry-images-dailystand.in

கடந்த சில தினங்களாக மதுரை , கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் அவர் கூட்டத்தில் பேசிய இப்ப இல்லனா எப்பவும் இல்ல, ஆன்மீக அரசியல் என்ற வசனங்களோடு பல போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டிவந்தனர்.

இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் நேற்றைய தினம் ரஜினி மக்கள் மன்றத்தில் சார்பில் அரசியல் கட்சி அறிவிப்பும் வரும் வரை அரசியல் ரீதியான போஸ்டர்களை அடிக்க வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சத்ய நாராயணன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று தலைமை உத்தரவு எனவும் தலைவா நீ எப்போ கட்சி தொடங்கினாலும் உங்களுக்குத்தான் மக்கள் ஆதரவு என்ற வசனத்தோடு மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட நெடிய நோட்டிஸ்களை ஒட்டியுள்ளனர்.

இதனை பார்த்துசெல்லும் பொதுமக்கள் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்பதற்கே போஸ்டரா என்ற ரஜினி ரசிகர்களின் செயலை கண்டு சிரித்தபடி கடந்து செல்கின்றனர்.

rajini-poster-1-dailystand.in rajini-poster-dailystand.in

Related posts

Leave a Reply