Home » “திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்கள்” – நடிகர் நாசர் ஓபன் டாக்
சினிமா

“திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்கள்” – நடிகர் நாசர் ஓபன் டாக்

dailystand.in

மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் எதிரொலி, பல்வேறு தொழில் துறைகள் அனைத்தும் முடங்கிப்போயுள்ளன. இந்நிலையில், இதில், திரைத்துறையும் பெரிதும் பாதிப்புக்குளாகியுள்ளன.

வெள்ளித்திரை, சின்னத்திரை என எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகப் பிரபலங்கள், வீட்டிலிருந்தபடியே சமூக வலைதளம் மூலம் கொரோனா விழிப்புணர்வு, குறும்படம், போட்டோஷூட், நேரலை என ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.

அந்தவகையில், ஸ்ரீப்ரியா இயக்கத்தில் ‘யசோதா’ குறும்படம் ஜூன் 29ம் தேதி வெளியானது. இதில் ஸ்ரீப்ரியா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதுகுறித்து நாசர் கூறியிருப்பதாவது:

” ‘யசோதா’ குறும்படத்தில் ஸ்ரீப்ரியாவின் கணவராக நடித்துள்ளேன். வீட்டிலிருந்தபடியே, தொலைபேசி மூலம் உரையாடி, ஆலோசித்து நடித்தது புதிய அனுபவம். என் மகன் லுப்துதீன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு செய்துள்ளார். இப்படி ஒவ்வொருவருக்கும் வீட்டில் இருப்பவர்கள் உதவி செய்துள்ளனர்.

வெவ்வேறு இடங்களில் குடும்பத்தினர் வசித்தாலும் அன்பு என்பது மாறவே மாறாது. அந்த விஷயத்தை ரொம்ப பாசிட்டிவாக இந்தக் குறும்படம் சொல்கிறது.

கொரோனா பரவல் காரணமாக திரையுலகம் 3 மாதங்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. அடுத்து என்ன பண்ணலாம் என ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்புகள் இனி எப்படி, திரையரங்கம் திறப்பு எல்லாம் இனிமேல் பெரிய சவால்தான். திரையுலகம் பழைய நிலைக்குத் திரும்ப நவம்பர் முதல் டிசம்பர் ஆகும் என நினைக்கிறேன்.

நடிகர்கள் பலரும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துள்ளனர். ‘கபடதாரி’ படத்துக்கு நானும் சம்பளத்தைக் குறைத்திருக்கிறேன். ஆகையால் சம்பளக் குறைப்பு மிகவும் நியாயம் தான்” என நாசர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply