Home » பிரபல பட தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா – வுக்கு ஹாப்பி பர்த்டே.!
சினிமா

பிரபல பட தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா – வுக்கு ஹாப்பி பர்த்டே.!

kegnanavelraja_dailystand.in

கே. இ. ஞானவேல் ராஜா புகழ்பெற்ற இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து அதிகளவிலான படங்களை இயக்கியுள்ளார், இவர் சூர்யாவின் உறவினரும் கூட.
கடந்த 2006-ஆம் ஆண்டு தான் ஸ்டுடியோ கிரீன் என்ற நிறுவனத்தை துவங்கினார். இதைத்தொடர்ந்து ஆதனா ஆர்ட்ஸ், புளு கோஸ்ட் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

இவர் முதன் முதலாக தயாரித்த படம் சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல். இப்படம் மாபெரும் வெற்றியை இந்த படக்குழுவிற்கு பெற்றுத்தந்தது.

பருத்திவீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, பையா, சகுனி, அட்டகத்தி, கும்கி, அலெக்ஸ் பாண்டியன் மற்றும் மெட்ராஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். கொம்பன் பட ரிலீஸ்ன் போது பல
இன்னல்களை சந்தித்தார், இவர் தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஞானவேல் ராஜா- சினிமாவில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ஹாப்பி பர்த்டே.

Related posts

Leave a Reply