Home » கொரோனா எதிரொலி: ‘சித்தி 2’ சீரியலில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. போட்டோவுடன் ராதிகா வெளியிட்ட அறிவிப்பு..!
சினிமா

கொரோனா எதிரொலி: ‘சித்தி 2’ சீரியலில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. போட்டோவுடன் ராதிகா வெளியிட்ட அறிவிப்பு..!

chithi2_dailystand.in

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்த போதிலும், நடிகர் நடிகைகள் பல்வேறு இடங்களில் அதாவது தங்களது சொந்த ஊர்களில் மாட்டிக்கொண்டதால், பயணித்து வர இயலாத காரணத்தினால், சிலர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 4 சீரியல்கள் நிறுத்தம் செய்யப்பட்டன.

இந்நிலையில், தற்போது ‘சித்தி 2’ சீரியலில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள் தொடர்பாக ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

“’சித்தி 2’ தொடர வேண்டும் என்பதால், உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட காரணங்களால் ஒரு சில நடிகர்களுக்கு பதில் வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில், பாதுகாப்பு மிக அவசியம். ‘சித்தி 2’ உங்கள் சன் டிவியில் விரைவில்” என தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டுடன் ராதிகா சரத்குமார் பதிவிட்ட சித்தி 2 குழுவினர் புகைப்படத்தில், பொன்வண்ணன் உள்ளிட்ட சில முக்கிய நடிகர்கள் இடம்பெறவில்லை. இதனால் மாற்றங்கள் குறித்து விரைவில் தெரியவரும்.

Related posts

Leave a Reply