September 28, 2020
Home » #BiggBossTamil Season 4 விரைவில்.. விஜய் டிவி வெளியிட்ட promo வீடியோ…! போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி..?!
சினிமா

#BiggBossTamil Season 4 விரைவில்.. விஜய் டிவி வெளியிட்ட promo வீடியோ…! போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி..?!

kamal-bb-dailystand.in

கடந்த 2017-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி ‘பிக் பாஸ்’ என்னும் நிகழ்ச்சியை தமிழில் தொடங்கியது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது தொடர்ந்து 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளுமே வெற்றிகரமாக கமலே தொகுத்து வழங்கினார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வருடந்தோறும் ஜூன் மாதத்தில் தான் தொடங்கும்.

ஆனால் இந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவி வரும் வேளையில் அரங்குகள் அமைத்து போட்டி தொடங்கப்படுமா என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து கொண்டிருகின்றன. மேலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது .

“கண்டிப்பாக் ‘பிக் பாஸ் 4’ இருக்கும். ஆனால் கொரோனா தொற்று பரவி வருவதால் அதன் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கொரோனா தொற்று சற்று ஓய்ந்தவுடன் பணிகளைத் தொடங்கவுள்ளோம். அது எப்போது என்பதை காலம் தான் முடிவு செய்யும். மேலும் இவ்வளவு வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை எப்படி நிறுத்த முடியும். ‘பிக் பாஸ் 4’ இன்னும் பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு இருக்கிறோம் என இது குறித்து விஜய் தொலைக்காட்சி தரப்பில் கூறப்பட்டது.

தற்போது, ஊரடங்கில் அடுத்தடுத்து பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, தமிழில் பிக் பாஸ் தொடங்குவதை சுட்டிக் காட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் விஜய் தொலைக்காட்சி.

இதனால், ரசிகர்கள், போட்டியாளர்கள் பட்டியல் வெளியாவதற்காக அடுத்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related posts

Leave a Reply