Home » ஆன்லைன் தளத்தில் வெளியாகும் லாரன்ஸ் படம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சினிமா

ஆன்லைன் தளத்தில் வெளியாகும் லாரன்ஸ் படம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Laxmmi-Bombdailystand

டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த படம் தான் காஞ்சனா. படத்தில்
திருநங்கையாக சரத்குமாரும், நாயகியாக ராய் லட்சுமியும் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படம் மாபெரும் வெற்றியை அவருக்கு பெற்றுத்தந்தது. பின்பு காமெடி கலந்த திகில் படங்களான காஞ்சனா 2, காஞ்சனா 3 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் காஞ்சனா படத்தை லாரன்ஸ் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட உள்ளார். ஆனால் இதில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் அக்சய் குமார் மற்றும் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் நடந்து வந்த நிலையில், படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. படத்தை நேரடியாக ஓடிடி -யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts

Leave a Reply