September 28, 2020
Home » உத்தமபுத்திரன் பட புகழ் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் மரணம்..! இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்..!
சினிமா

உத்தமபுத்திரன் பட புகழ் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் மரணம்..! இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்..!

actor-jayaprakash-reddy-dailystand.in

நடிகர் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்த பிரம்மபுத்ருடு என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி. அதனைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணாவின் சமரசிம்மா ரெட்டி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மிக பிரபலமானார்.

தெலுங்கு மட்டுமின்றி, தமிழ் மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆஞ்சநேயா படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து, ஆறு, தர்மபுரி படங்களில் நடித்தார். முக்கியமாக, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலம் ஆனார்.

74 வயதான நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி, மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply